மேலும் செய்திகள்
சாணார்பட்டியில் காதல் ஜோடி தஞ்சம்
25-Jun-2025
இடைப்பாடி, இடைப்பாடி, வெள்ளாண்டிவலசை சேர்ந்தவர் காளீஸ்வரன், 31. பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய, பெருந்துறையை சேர்ந்த வனிதா, 19, என்பவரை, காளீஸ்வரன் காதலித்தார். இதற்கு பெற்றோர் சம்மதிக்காததால், நேற்று வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா, காளீஸ்வரன் ஆகியோர், திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு இடைப்பாடி போலீசில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
25-Jun-2025