மேலும் செய்திகள்
சிவகாசியில் 2650 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி
05-Dec-2024
கெங்கவல்லி: கெங்கவல்லி தாலுகாவில், 15,000 ஏக்கர் மக்காச்சோளம், 290 ஏக்கர் பருத்தி, 1,400 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையில், மக்காச்சோளம், பருத்தி, நெல் என, 9,450 ஏக்கர் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகின.இந்நிலையில் பயிர் சேதம் குறித்து நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக, கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுடன், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.அப்போது தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், ''மழை சேதத்தில் பாசன பயிருக்கு ெஹக்டேருக்கு, 17,000 ரூபாய், மானாவாரி பயிருக்கு ெஹக்டேருக்கு, 8,500 ரூபாய் வழங்கப்படுகிறது. பயிர் பாதிப்பு குறித்த சர்வே எண் விபரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிச., 18(இன்று) காலை, 11:00 மணிக்குள், பாதிக்கப்பட்ட விவசாயிகள், வி.ஏ.ஓ., - வேளாண், தோட்டக்கலை அலுவலகத்தில் மனு அளிக்கலாம்,'' என்றார்.வேளாண் உதவி இயக்குனர் மோகனசரிதா உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் ஆத்துார், தலைவாசல் பகுதிகளில் பயிர் பாதிப்புகள் குறித்து, கள ஆய்வு செய்து மனுக்கள் பெறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
05-Dec-2024