போதிய மருத்துவர், பணியாளரின்றி அரசு மருத்துவமனையில் கூட்டம்
ஓமலுார்: ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு நேற்று ஏராளமானோர் வந்-தனர். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வழக்கமாக ஓ.பி., சீட் வழங்கும் பணியாளர் விடுமுறையில் சென்றார். இதனால், ஓ.பி., சீட்டை, கையில் எழுதி கொடுத்தனர். சிகிச்சை அளிக்க, மருத்துவர் ஒருவர் மட்டும், ஓ.பி.,யில் இருந்தார். இதனால் அங்கும் கூட்டம் காணப்பட்டது. சிலர் நிற்க முடியாமல் தரையில் அமர்ந்திருந்தனர். மருத்துவமனை வளாகம் முழுதும் ஆங்காங்கே, இருசக்கர வாக-னங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நோயாளிகள் பிற வார்டுகளுக்கு நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் விடுமுறை நாட்களில் விரைவாக சிகிச்சை அளிக்க, போதிய மருத்துவர்கள், ஊழியர்கள், பணியில் இருக்கும்படி, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.