உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தரையில் கிடக்கும் மின் ஒயரால் ஆபத்து

தரையில் கிடக்கும் மின் ஒயரால் ஆபத்து

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் அருகே, ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை குழாய் கிணறு உள்-ளது. அருகே, அதன் மோட்டாரை இயக்கும் மின் பெட்டி உள்-ளது.அதில் இருந்து ஆழ்துளை குழாய் கிணற்றுக்கு மின்சாரம் செல்லும், 15 அடி நீள ஒயர், மண்ணின் மேற்புறத்தில் கிடக்கி-றது. மழை பெய்தால், அப்பகுதியில் தண்ணீர் தேங்கும். அருகே கோவில், மண்டபம் உள்ளதால், மக்கள் கூட்டம் அதிகம் கூடும் பகுதியாக உள்ளது. இதனால் மின் விபத்தில் மக்கள் பாதிக்கும் ஆபத்து நிலவுவதால், தரையில் கிடக்கும் மின் ஒயரை பாதுகாப்-பாக வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை