மேலும் செய்திகள்
அறநிலையத்துறை பெயரை மாற்ற காங்கிரஸ் கோரிக்கை
10-Jan-2025
மேட்டூர்: மேட்டூர், துாக்கானம்பட்டியில் ஆதிசக்தி காளியம்மன் கோவில் உள்ளது. இதன் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், கருவறை கோவில் நிலத்திலும், பிரகாரம் நெடுஞ்சா-லைதுறை நிலத்திலும் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான, 7 சென்ட் நிலத்தில், 0.25 சென்ட் மட்டுமே இருக்கும் நிலையில், இதர நிலங்களை மீட்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த, 7ல், சாலை மறியலில் ஈடுபட்டனர். மறுநாள் காலை அறநிலையத்-துறை தனி தாசில்தார் (ஆலயங்கள்) ஜெயவேலு தலைமையில், சர்வேயர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை அளக்க சென்றனர். ஆக்கிர-மிப்பாளர்கள் எதிர்ப்பால் அறநிலையத்துறையினர் நிலத்தை அளக்காமல் திரும்பினர்.நிலம் அளவீடு செய்வது குறித்து அறநிலையத்துறை அலுவ-லர்கள் கூறுகையில், ''ஆதிசக்தி காளியம்மன் கோவில் கடந்த, 2012ல்தான் அறநிலையத்துறை வசம் வந்தது. அதற்கு முன்பு கோவில், அதன் சுற்றுப்பகுதி நத்தமாக இருந்துள்ளது. எனவே, 1978ல் உள்ள வருவாய்துறை நில அளவை பதிவுகளை பெற்று, நிலத்தை அளக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான பதிவேடுகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளது. அந்த பதிவுகளை வழங்க-கோரி, அறநிலையத்துறை சார்பில் வருவாய்துறையில் கேட்டுள்ளோம். அவை கிடைத்ததும் கோவில் நிலத்தை மீண்டும் அளக்கும் பணி துவங்கும்,'' என்றனர்.
10-Jan-2025