உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தெலுங்கு மக்கள் குறித்து அவதுாறு பேச்சு நடிகையை கைது செய்ய கோரிக்கை

தெலுங்கு மக்கள் குறித்து அவதுாறு பேச்சு நடிகையை கைது செய்ய கோரிக்கை

சேலம், நவ. 6-தெலுங்கு மக்கள் குறித்து, அவதுாறாக பேசிய நடிகை கஸ்துாரியை கைது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து சேலத்தில், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் மாநில தலைவர் நாகா அரவிந்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை, எழும்பூரில் நடந்த பிராமணர் சங்க கூட்டத்தில், நடிகை கஸ்துாரி, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியுள்ளார். குறிப்பாக, 300 ஆண்டுகளுக்கு முன் மன்னர்கள் அந்தப்புரத்தில் வேலை செய்தவர்கள் தெலுங்கர்கள் என கூறி அவதுாறாக சித்தரித்துள்ளார். அவரது பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.தமிழக அரசு, நடிகை கஸ்துாரியை உடனே கைது செய்ய வேண்டும். அவர் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் பற்றி தான் குறிப்பிட்டேன் என கூறுவதை ஏற்க முடியாது. அவர்களும் தெலுங்கு மொழி பேசுபவர்கள் தான்.கஸ்துாரி மன்னிப்பு கேட்டார் என்பதை ஏற்க முடியாது. அவர் பொது இடத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெலுங்கர்கள் அதிகம் வசிக்கும் ஆந்திரா, தெலுங்கானாவில், கஸ்துாரியின் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். சென்னையில், டி.ஜி.பி.,யை சந்தித்து கஸ்துாரி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.கவுரவ தலைவர் ஜெயக்குமார், செயலர் முரளி உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை