உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களை குத்தகையில் இயக்குவதை கைவிட கோரிக்கை

பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களை குத்தகையில் இயக்குவதை கைவிட கோரிக்கை

சேலம்: பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களை குத்தகை அடிப்ப-டையில் இயக்குவதை கைவிட கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம் சார்பில் அதன் பொது செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, மின்னஞ்சல் மூலம் அனுப்பிய மனு: அரசு போக்குவரத்து பஸ்கள், தமிழகத்தில், 2018 - 2019 நிதியாண்டில், 21,744 பஸ்கள் இயங்கிய நிலையில், 2024 - 2025 நிதியாண்டில், 20,260 பஸ்களாக குறைந்துள்ளன. மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், அரசு பஸ்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்-கேற்ப பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தவில்லை.கடந்த, 3 ஆண்டுகளில் புது பஸ்கள் கொள்முதல் இல்லை. பழைய பஸ்களையே சரிசெய்து இயக்கும் நிலை உள்ளது. அதனால் புது பஸ்களை கொள்முதல் செய்து அதிக தடங்களில் இயக்க வேண்டும். மேலும் பண்டிகை காலங்களில் தேவை அறிந்து பஸ்களை இயக்காமல் பயணியர் கூட்டத்தை வைத்து தனியார் பஸ்கள் மூலம் குத்தகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும். குறிப்பாக போக்குவரத்து கழகங்களில் பணி-மனை பணியாளர் நியமனம், பஸ்கள் இயக்கம் என, தனியார் மய நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்-பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி