உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நடை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நடை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, காகாபாளையத்தில் நடைமேம்பாலம் அமைக்க கோரி, பொதுமக்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், காகாபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, பைபாஸ் சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் ரேஷன் கடை, போலீஸ் ஸ்டேஷன் உள்பட தங்கள் தேவைக்காக தினமும் பைபாஸ் சாலையை கடந்து செல்கின்றனர். இரு ஆண்டுக்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்தனர். மேலும் மக்கள் பயன்படுத்த, வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தரைகீழ் பாலம் அமைக்கப்பட்டது. ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்பை, பள்ளி அருகே மாற்றி விட்-டனர். இதனால் பொதுமக்கள், பயணிகள் தரைகீழ் பாலத்திற்கு சென்று, சாலையை கடக்க நீண்ட துாரமாகிறது.ஒரு புறம் ஆட்டையம்பட்டி பிரிவு சாலை, மறுபுறம் கனககிரி ஊராட்சி என இரு இடங்களில் நின்று ஈரோடு, சங்ககிரி, கோவை செல்லவும், அதே போல் சேலம், ஆட்டையாம்பட்டி செல்லவும் அவசரகதியில் வேகமாக பைபாஸ் சாலையை கடப்பதால் விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையை எளிதாக விபத்தில்-லாமல் கடக்க, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து, பைபாஸ் சாலை குறுக்கே கனககிரி ஊராட்சி அலுவலகம் எதிரே வரை, நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். இடமாற்றம் செய்-யப்பட்ட பஸ் ஸ்டாப்பை மீண்டும் முன்புபோல் செயல்பட வலி-யுறுத்தி நேற்று காலை, 9:00 மணிக்கு ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதையடுத்து, மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை-துறை உதவி பொறியாளர் கார்த்தி ஆகியோர் சமாதானம் பேசி-யதால் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ