உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திடீர் நெஞ்சு வலியால் துணை பி.டி.ஓ., உயிரிழப்பு

திடீர் நெஞ்சு வலியால் துணை பி.டி.ஓ., உயிரிழப்பு

வாழப்பாடி, நவ. 2-சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்தவர் சட்டநாதன், 44. இவர், கொளத்துார் ஒன்றியத்தில் துணை பிடிஓ.,வாக பணிபுரிந்தார்.நேற்று மதியம், 2:30 மணிக்கு சேலத்திலிருந்து, ஆத்துார் நோக்கி அவரது மனைவியுடன் காரில் சென்றுள்ளார். வாழப்பாடி அடுத்த, மேட்டுப்பட்டி டோல்கேட் அருகே சென்றபோது, திடீரென சட்டநாதனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, காரை சாலையோரம் நிறுத்தினார்.அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, மின்னாம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சட்டநாதன் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை