உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கெங்கவல்லி, கொண்டையம்பள்ளி வீரபத்திர சுவாமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.தம்மம்பட்டி அருகே, கொண்டையம்பள்ளியில், வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் ஆடி மாதத்தில், கோவிலில் குரும்பர் சமுதாய மக்கள் திருவிழா நடத்தி வருகின்றனர். நேற்று, வீரபத்திர சுவாமியை சுவேத நதிக்கு எடுத்துச் சென்று பூஜை செய்த பின், கோவிலுக்கு சென்றனர். அங்கு ஏராளமான பக்தர்கள், தங்களது தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மாரியம்மன் கோவிலில் இருந்து, வீரபத்திர சுவாமி, சித்தப்பன், ஜடையப்பன், பாவாடராயன், தொட்டிலிபீரம்மாள், பட்டக்காரன், குப்பத்தப்பன் உள்ளிட்ட சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி