பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அருகே ச.ஆ.பெரமனுார் மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, சுற்று பொங்கல் விழா நேற்று நடந்தது. அம்மனுக்கு அபி ேஷகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து படையலிட்டு அம்மனை வழிபட்டனர்.மாலையில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலா வந்தார். வழிநெடுக பக்தர்கள் வழிபட்டனர்.