உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தம்மம்பட்டி டவுன் பஞ்., செயல் அலுவலர் இடமாற்றம்

தம்மம்பட்டி டவுன் பஞ்., செயல் அலுவலர் இடமாற்றம்

கெங்கவல்லி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சிறப்பு நிலை டவுன் பஞ்சாயத்தில், செயல் அலுவலராக பணியாற்றிய ஜெசிமாபானு, கோவை, இருகூர் சிறப்பு நிலை டவுன் பஞ்சாயத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இரு மாதங்களுக்கு முன், கோவை மாவட்டத்தில் இருந்து, இங்கு இடமாற்றப்பட்ட நிலையில், மீண்டும் அதே மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு, கடந்த, 7 மாதங்களில், 3 செயல் அலுவலர்கள் பொறுப்பேற்று மாற்றப்பட்டுள்ளனர். மேலும் தம்மம்பட்டி செயல் அலுவலர் பொறுப்பை, செந்தாரப்பட்டி செயல் அலுவலர் சிவக்குமார் கூடுதலாக கவனிக்க, சேலம் மாவட்ட டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி