டி.ஐ.ஜி., ஆய்வு
சேலம்: சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறை, டவர் பிளாக் பகு-தியில், 10 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் சமீ-பத்தில் பெய்த மழையால் நீர் கசிவு ஏற்பட்டது. அதை, சிறை எஸ்.பி., வினோத்(பொ) சரிசெய்தார். இதையறிந்து நேற்று முன்தினம், கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி., சண்முகசுந்-தரம் வந்து, நீர் கசிவு அறைகளை பார்வையிட்டார். பின், 'இது-போன்று நடக்காதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்-கொள்ள வேண்டும்' என, சிறைத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.