மேலும் செய்திகள்
நீரில் மூழ்கியவர்களை மீட்க விழிப்புணர்வு
01-Oct-2026
ஓமலுார்; வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக, ஓமலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்ம-லிங்கம் தலைமையில் வீரர்கள், முத்துநாயக்-கன்பட்டியில் உள்ள ஏரியில் நேற்று, மக்கள் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். குறிப்பாக பேரிடர் காலங்களில் நீர்நிலைகளில் சிக்கினால் எவ்வாறு தப்பிப்பது, தற்காத்துக்-கொள்வது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் நவீன உபகர-ணங்களை, மக்களுக்கு காட்சிப்படுத்தினர்.
01-Oct-2026