மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மேட்டூர் அணையில் ஆய்வு
மேட்டூர், வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகளை, சேலம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆர்த்தி ஆய்வு செய்தனர்.வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பலத்த மழையால் ஆற்றில் வெள்ளம், நிலத்தில் மழைநீர் புகுந்து பயிர்கள் சேதப்படுவது உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க, சேலம் மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு அதிகாரியாக துணை முதல்வரின் துணை செயலாளர் டாக்டர் ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் நேற்று காலை மேட்டூர் அணை, 16 கண் மதகு, இடதுகரை, வலதுகரை பகுதிகளை பார்வையிட்டு பாசன நீர், உபரி நீர் திறப்பு குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் காவிரி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மேட்டூர் அணை பொறியாளர்களிடம் கேட்டறிந்து மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார், மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், தாசில்தார் ரமேஷ், மேட்டூர் அணை மேற்பார்வை பொறியாளர் வெங்கடாசலம், அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.