உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., தில்லுமுல்லுவை முறியடிக்க வேண்டும்

தி.மு.க., தில்லுமுல்லுவை முறியடிக்க வேண்டும்

தலைவாசல் :தலைவாசல் அருகே, மணிவிழுந்தான் மற்றும் தேவியாக்குறிச்சி கிராமங்களில், அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமை வகித்தார்.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில், 'வாக்காளர் சீர்திருத்த பணி மேற்கொள்ளும்போது, தகுதியான வாக்காளர், நீக்கப்பட்ட வாக்காளர், போலி வாக்காளர்கள் குறித்து கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். கெங்கவல்லி தொகுதியில், 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வெற்றி பெறும். தேர்தல் பணியில், தி.மு.க.,வின் தில்லுமுல்லுவை முறியடிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !