பணம் கொடுத்து யாரையும் அழைத்து வரக்கூடாது
ஓமலுார்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும், 27ல், தமிழக வெற்றிக்கழக கட்சி மாநாடு நடக்க உள்ளது. இதனால் சேலம் மாவட்டம் ஓமலுாரில், சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் மாநாட்டுக்கு பெண்களை அதிகளவில் அழைத்து வர வேண்டும்; யாரும் மது அருந்திவிட்டு வரக்கூ-டாது; பணம் கொடுத்து யாரையும் அழைத்து வரக்கூடாது என்-பன உள்ளிட்ட ஆலோசனைகள், பொறுப்பாளர்களுக்கு வழங்கப்-பட்டன. ஓமலுார், காடையாம்பட்டி, தாரமங்கலம் பகுதியில் உள்ள ஒன்றிய, நகர, மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.