மேலும் செய்திகள்
5 ஆண்டுக்கு பின் 2 பேர் சிக்கினர்
31-Jul-2025
ஆத்துார், சேலம் மாவட்டம் கெங்கவல்லி, இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வா, 29. டிரைவராக பணிபுரிந்த இவர், பின் பெயின்டராக கூலி வேலையில் ஈடுபட்டார். இவர், 2017 மார்ச், 27ல், கெங்கவல்லி வழியே மினி சரக்கு வேனை ஓட்டிச்சென்றபோது ஏற்பட்ட விபத்தில், அதில் பயணித்த, 4 பேர் உயிரிழந்தனர்.கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து, ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த செல்வாவுக்கு, நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், நேற்று முன்தினம், அவரை, போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் செல்வாவுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, 11,000 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் உதயசுந்தரம் உத்தரவிட்டார்.
31-Jul-2025