விபதத்தில் டிரைவர் பலி
இடைப்பாடி:இடைப்பாடி அருகே வெள்ளார் நாயக்கன்பாளையத்தை சேர்ந்த, மணி மகன் அபிகுமார், 24. லாரி டிரைவரான இவர், நேற்று, 'யமஹா ஆர்15' பைக்கில், ஜலகண்டாபுரத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.ஒட்டப்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜ், 27, பைக்கில் அமர்ந்திருந்தார். மதியம், 2:40 மணிக்கு நாச்சிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சென்றபோது, காரை முந்த முயன்றார். அப்போது கார் மீது மோதி, ஈசர் லாரி மீது பைக் மோதியது.இதில் அபிகுமார் சம்பவ இடத்தில் பலியானார். கார்த்திக்ராஜ் படுகாயம் அடைந்து சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.