ஆம்னி பஸ்சுக்கு சாலை வரி செலுத்தாமல் ஆட்டம் காட்டிய டிரைவருக்கு காப்பு
சேலம்: சேலம் போக்குவரத்து துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், நேற்று மதியம், கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அடுத்தடுத்து வந்த, கர்நாடகா, நாகாலாந்து, கேரளம், அருணாசல பிரதேச ஆம்னி பஸ்களை மடக்கி நடத்திய சோதனையில், சாலை வரி செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்-கப்பட்டது. 4 ஆம்னி பஸ்களுக்கும் சேர்த்து 3.04 லட்சம் ரூபாய் சாலை வரி, அபராதமாக தலா, 10,000 வீதம், 40,000 ரூபாய் விதித்து உடனே வசூலிக்கப்பட்டது. மாலை, 5:40 மணிக்கு வந்த, நாகாலாந்தை சேர்ந்த இன்னொரு ஆம்னி பஸ்சும் சாலை வரி செலுத்தாததும், பெங்களூரு - எர்ணா-குளம் செல்வதும் தெரிந்தது. திருப்பூர் மாவட்டம் பூலுாவபட்-டியை சேர்ந்த அதன் டிரைவர் மணிகண்டன், 31, சாலை வரியை செலுத்தி விடுவதாக கூறினார். அதை ஏற்று அதிகாரிகள், 40 பய-ணியருடன் இருந்த ஆம்னி பஸ்சை ஓரமாக நிற்க அறிவுறுத்தினர்.அதன்படி நிறுத்திய மணிகண்டன், மொபைல் போனில் பஸ் ஓனரிடம் பேசிய நிலையில், திடீரென வரி செலுத்த மறுத்து, அங்-கிருந்து பஸ்சை ஓட்டிக்கொண்டு வேகமாக புறப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அலுவலர்கள், உடனே சுதாரித்து, அங்கி-ருந்த போலீசார் உதவியுடன் ஜீப்பில், அரை கி.மீ., விரட்டி சென்று, ஆம்னி பஸ்சை மடக்கி, மீண்டும் சுங்கச்சாவடி பகுதிக்கு அழைத்து வந்தனர்.இதில் கோபம் அடைந்த மணிகண்டன், சாலை குறுக்கே பஸ்சை நிறுத்தி மல்லுக்கட்டினார். இதனால் பயணியர் நலன் கருதி, மணிகண்டனுடன் இருந்த இன்னொரு டிரைவர் முரு-கேசன், 40, மூலம் அந்த ஆம்னி பஸ்சை அனுப்பிவிட்டு, மணி-கண்டனை, கருப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து ஓமலுார் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி புகார்படி, மணிகண்டன் மீது வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்து, மேல் விசாரணை நடத்தினர்.அதிகாரிகள் கூறுகையில், 'இதுதவிர கிரேன், பொக்லைன் வாக-னத்துக்கு சாலை வரி, 58,000 ரூபாய், அபராதம், 2,500 ரூபாய் வசூலிக்கப்பட்டது' என்றனர்.