ரேஷன் அரிசி பறிமுதல் கடத்திய டிரைவருக்கு காப்பு
ஆத்துார், சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஆத்துார் அருகே, ஆத்துார் -மல்லியக்கரை சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த வேனை நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. வேனை ஓட்டி வந்த மல்லியக்கரையை சேர்ந்த சக்திவேல், 42, என்பவரிடம் விசாரித்ததில், மல்லியக்கரை சுற்றுவட்டார பகுதிகளில், குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, கோழி பண்ணை, மாடு வளர்ப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 1 டன் ரேஷன் அரிசி, வேனை பறிமுதல் செய்தனர்.