மேலும் செய்திகள்
செப். 13ல் சிறப்பு கல்வி கடன் முகாம்
11-Sep-2024
சேலம்: சேலம், நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லுாரியில், இன்று, (24ல்,) கல்விக்கடன் மேளா நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு தொடங்கி, மாலை, 5:00 மணி வரை நடக்கும் மேளாவில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த, வெளி மாவட்டத்தில் குடியிருந்து, சேலம் மாவட்டத்தில் பயிலும் மாணவ,மாணவியர் கலந்து கொள்-ளலாம்.ஏற்கனவே, வங்கிகளில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்கள், புதிதாக கல்விக்கடன் பெற விரும்-புவோர் வருகை தரலாம். 10ம் வகுப்பு படித்தவர் டிப்ளமோ, ஐ.டி.ஐ., படிக்கவும், பிளஸ் 2 முடித்தவர் பட்டப்படிப்புக்கும், கல்-லுாரிகளில் முதலாண்டு தொடங்கி, நான்காம் ஆண்டு வரை பயில்வோர், முதுநிலை பயில்வோர் கடனுதவி பெறலாம்.கல்விக்கடன் பெற 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், ரேஷன் கார்டு, ஆதார், பான் கார்டு, ஜாதிச்சான்று, வருமான சான்று ஆகியவைகளின் நகல், அடையாள அட்டை, வங்கிக-ணக்கு புத்தக நகல், கல்வி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்று, வித்யாலஷ்மி ஜன்சமார்த் இணையதளத்தில பதிவு செய்-திருந்தால் அதன் விண்ணப்ப நகல், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியன கொண்டு வர வேண்டும். இத்தகவலை, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
11-Sep-2024