மேலும் செய்திகள்
வீடியோவால்மது விற்றவர் சிக்கினார்
12-Apr-2025
பெத்தநாயக்கன்பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம், கொட்டவாடியை சேர்ந்தவர் வேடி கவுண்டர், 80. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, கல்யாணகிரியில் இருந்து கொட்டவாடி நோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். கொட்டவாடி, செல்லியம்மன் கோவில் அருகே சென்றபோது, முன்புறம் நின்றிருந்த டிராக்டர், பின்னால் வந்து, வேடி கவுண்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில், அவர் இறந்துவிட்டார். ஏத்தாப்பூர் போலீசார், டிராக்டர் டிரைவர் சக்தி வேல் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
12-Apr-2025