உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் தபால் அலுவலகம் அருகே கருணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 62. இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாட்டால் கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்று, தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், எருமாபாளையம் அருகே குருவிப்பண்ணை ஏரியில் நேற்று முன்தினம் ராஜா குளிக்க சென்றார். அப்போது சேற்றில் சிக்கி, சிறிது நேரத்தில் இறந்துள்ளார். கிச்சிப்பாளையம் போலீசார் அவரது உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ