உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலியல் தொல்லை வழக்குகள் முதியவர், வாலிபருக்கு 5 ஆண்டு

பாலியல் தொல்லை வழக்குகள் முதியவர், வாலிபருக்கு 5 ஆண்டு

சேலம்:சேலம், கந்தம்பட்டி, செஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன், 63. கூலித்தொழிலாளியான இவர், 2022ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, சூரமங்கலம் மகளிர் போலீசார், ஜெயராமனை கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் ஜெயராமனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார்.அதேபோல் வாழப்பாடி அருகே கோனார் செட்டியூரை சேர்ந்தவர் மணிகண்டன், 22. கூலித்தொழிலாளியான இவர், 2021ல், ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கில் மணிகண்டனை, வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். அவருக்கும், 5 ஆண்டு சிறை தண்டனை, 1,500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை