ஏரியில் முதியவர் சடலம் மீட்பு
மகுடஞ்சாவடி, டிச. 21-மகுடஞ்சாவடி ஊராட்சி நம்பியாம்பட்டி ஏரியில் நேற்று காலை, 9:00 மணிக்கு ஒரு முதியவர் சடலம் மிதந்தது. மக்கள் தகவல்படி, மகுடஞ்சாவடி போலீசார் சென்று, முதியவர் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், நம்பியாம்பட்டியை சேர்ந்த பொன்னு பையன், 85, என தெரிந்தது. அவர் எப்படி இறந்தார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.