மேலும் செய்திகள்
மூப்பனார் பிறந்தநாள் விழா
20-Aug-2025
ஓமலுார், த.மா.கா.,வின் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், அக்கட்சி நிறுவனர் மூப்பனாரின், 94வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் அக்கட்சியினர், கருப்பூர் கந்தசாமி கோவிலில், மூப்பனார் பெயருக்கு அபிேஷகம், அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து ஓமலுாரில் உள்ள இதயாலயா ஆதரவற்ற இல்லத்தில், 110 மாணவியருக்கு அன்னதானம் வழங்கினர். புறநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஓமலுார் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
20-Aug-2025