உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில் சுரங்கப்பாதையில் மின்விளக்கு அவசியம்

ரயில் சுரங்கப்பாதையில் மின்விளக்கு அவசியம்

காடையாம்பட்டி: காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து வத்தியூர், பாலமேடு குரும்பப்பட்டி வழியே சேலத்துக்கு தினமும் பலர் சென்றுவருகின்றனர். குறிப்பாக அதிகாலையிலேயே விவசாயிகள், விளை பொருட்களை கொண்டு செல்கின்றனர். பெண்கள், கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் பலரும், இருசக்கர வாகனத்தில் இரவில் ரயில்வே சுரங்கப்பாதையில் செல்லும்போது, இருள் சூழந்து உள்ளதால் அச்சப்படுகின்றனர். அதனால் அங்கு மின்விளக்கு பொருத்த, அப்பகுதி மக்கள் பலமுறை ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இனியாவது துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை