உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின் மோட்டார் திருட்டு தண்ணீரின்றி மக்கள் தவிப்பு

மின் மோட்டார் திருட்டு தண்ணீரின்றி மக்கள் தவிப்பு

சேலம்: சேலம், அம்மாபேட்டை, 33வது வார்டு சேர்மன் சடகோபன் தெருவில், 20 ஆண்டுக்கு முன், ஆழ்துளை குழாய் அமைத்து அடிபம்பு அமைக்கப்பட்டது. 10 ஆண்டுக்கு முன் அடி பம்பு அகற்றப்பட்டு, அதே இடத்தில், 500 லிட்டர் கொள்ளளவில், பிளாஸ்டிக் தொட்டி வைத்து அதில் தண்ணீரை ஏற்ற, மின்-மோட்டார் பம்பு பாதுகாப்பு அறை கட்டப்பட்டு, மக்கள் பயன்ப-டுத்தி வந்தனர்.ஆனால் இரு மாதங்களுக்கு முன்பு மின் மோட்டார் அறையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மோட்டாரை திருடிச்சென்றனர். இதனால் ஆழ்துளை குழாய், தொட்டி பயன்பாடின்றி கிடக்கிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், அப்பகுதி மக்கள் தண்ணீருக்கு வேறு இடங்களுக்கு சென்று பிடித்து வரும் நிலை உள்ளது.அதனால் அதிகாரிகள், மாற்று மின் மோட்டார் அல்லது புது மோட்டார் பொருத்தி, தொட்டியில் தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை