உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தை தவிர்க்க நிதி ஒதுக்கீடு; மின் தொழிலாளர் வலியுறுத்தல்

விபத்தை தவிர்க்க நிதி ஒதுக்கீடு; மின் தொழிலாளர் வலியுறுத்தல்

மேட்டூர்: தமிழ்நாடு மின் தொழிலாளர் சம்மேளனம், மேட்டூர் அனல்மின் நிலைய கிளை சார்பில், சின்னபார்க் அருகே, பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், 25 ஆண்டுகளாக பொருத்துனர், 2ம் நிலை களப்பணியாளர்களுக்கு, முகவர் உபரி, 2ம் நிலை பதவி உயர்வு வழங்குதல்; ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்தி, மின் கழகமே நேரடியாக சம்பளம் வழங்குதல்; நிதி பற்றாக்குறையால் போதிய தளவாடங்கள் இல்லாதது, உரிய பராமரிப்பின்றி ஏற்படும் விபத்துகளை தவிர்க்க மின்கழகம் போதிய நிதி ஒதுக்கீடு செய்தல் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, தலைவராக ராஜ்குமார், செயலராக ராஜேந்திரன், பொருளாளராக சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ