உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்கள் பாதிக்காதபடி நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

மக்கள் பாதிக்காதபடி நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்-பெருக்கால், பண்ணப்பட்டி குட்டையில் இருந்து தண்ணீர் வெளி-யேறி, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை, பண்ணப்பட்டி பிரிவு சாலையில் ஆறாக ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்-கப்பட்டது. தற்போது தண்ணீர் முறையாக கால்வாயில் வெளி-யேற்றப்பட்டு வருகிறது. பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், பண்ணப்பட்டி பிரிவு சாலையில் செல்லும் கால்வாய் தண்ணீர், கஞ்சநாயக்கன்பட்டியில் கோடி விழுந்த வட-மனேரியை நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து சதாசிவம் கூறுகையில், ''மக்கள் ஆபத்தான முறையில் வடமனேரியை கடந்து செல்கின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகள், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பாதிக்-காதபடி, நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீர்வளத்-துறை, உள்ளாட்சி துறை இணைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வெள்ள பாதிப்பு ஏற்படாதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். காடையாம்பட்டி தாசில்தார் மனோகரன், பி.டி.ஓ., ஆனந்தி, பா.ம.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் உட-னிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !