மேலும் செய்திகள்
பலகார கடைகளில் உணவு துறை ஆய்வு
29-Oct-2024
சேலம்:சேலம் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில், மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 20 கடைகளில் இருந்து காலாவதியான மிக்சர், முறுக்கு, பாப்கார்ன், சமோசா என, 110 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காலாவதி தேதி குறிப்பிடாத தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானம் என, 45 லிட்டர், பொட்டலமிடப்பட்ட உணவுப்பொருட்கள், 40 கிலோ, சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வடை, போண்டா, 30 கிலோ என, மொத்தம், 50,000 ரூபாய் மதிப்பில் உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.இதுகுறித்து கதிரவன் கூறுகையில், ''20 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனையில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
29-Oct-2024