சாராய ஊறல் போட்ட விவசாயி சிக்கினார்
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், ஏ.குமாரபாளையத்தில் உள்ள விவசாயி பழனிசாமி, 40, வீட்டில் ஏத்தாப்பூர் போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது மொட்டை மாடியில், 30 லிட்டர் சாராய ஊறல் இருந்தது. ஊறலை அழித்த போலீசார், தனியே விற்க வைத்திருந்த, 10 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர். பின் பழனிசாமியை கைது செய்தனர்.