பைக்கில் வேகமாக சென்றபோது தடுமாறி விழுந்த விவசாயி பலி
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், தாண்டானுார், ஆத்து-மேட்டை சேர்ந்த விவசாயி ராஜா, 55. அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சிவசந்-திரன், 38. இருவரும், 'யமஹா ஒய்பிஆர்' பைக்கில், தும்பலில் இருந்து ஆத்துார் நோக்கி, நேற்று சென்று கொண்டிருந்தனர். ராஜா ஓட்-டினார். மதியம், 1:15 மணிக்கு ஏ.குமாரபாளையம் புது ரோடு வளைவு அருகே அதிவேகமாக சென்ற-போது, நிலை தடுமாறி விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜா, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயம் அடைந்த சிவசந்திரனை, மக்கள் மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.