உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் சிக்கிய விவசாயி மூளைச்சாவு

விபத்தில் சிக்கிய விவசாயி மூளைச்சாவு

விபத்தில் சிக்கியவிவசாயி மூளைச்சாவுசேலம், நவ. 23-கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தும்பை வடக்கு தெருவை சேர்ந்த, விவசாயி சம்பத், 34. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 20ல் சம்பத், சங்கராபுரத்தில் இருந்து புது பாலப்பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. அதில் படுகாயம் அடைந்த அவர், சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று மூளைச்சாவு அடைந்தார். சங்காராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை