உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தராமல் அலைக்கழிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தராமல் அலைக்கழிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

சேலம், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தராமல் அலைக்கழிக்கப்படுவதாக, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:சிவக்குமார்: ஆத்துார் தாலுகாவில் செம்பேன் தாக்குதலால் மரவள்ளி பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும். ஆத்துார் சுற்றுப்புற பகுதிகளில் காலை, 5:00 முதல், 9:00 மணி வரை, இருமுனை மின்சாரத்தால் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் உள்ளதால், அதை மும்முனை மின்சாரமாக மாற்றித்தர வேண்டும்.முத்து குமரேசன்: கூலமேட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 10ல், 3 மட்டும் செயல்பாட்டில் உள்ளது. அதேபோல் பிளாஸ்டிக் டேங்க், 25ல், 5 மட்டும் உபயோகத்தில் உள்ளது. மேட்டூர் குடிநீரும், 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் வருவதால் ஊராட்சியில் தட்டுப்பாடு நிலவுகிறது. மும்முனை மின்சாரம் வழங்கி மீதமுள்ள, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.கணபதி: மாவட்டத்தில், 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தில், 57 மட்டும் நிரப்பப்படுகின்றன. மீதி ஏரிகளை நிரப்ப, 115.88 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு அரசுக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த நிதி ஒதுக்கினால் மட்டுமே, 100 ஏரி திட்டம் நிறைவு பெறும் என்பதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணேசன்: தலைவாசல், வெள்ளையூர், பெரியேரி, 186 ஏக்கரில், 30 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மீட்டெடுக்க வேண்டும். வேதநாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்துக்கு, தனியார் பெயரில் பட்டா உள்ளது. கோவில் பெயருக்கு மாற்றக்கோரி, 3 ஆண்டாக மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.சின்னசாமி: கெங்கவல்லி தாலுகாவில், 12 கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நகைக்கடன் தராமல் அலைக்கழிக்கின்றனர். இதுபற்றி கேட்டால் மத்திய கூட்டுறவு வங்கி கடன் தருவதில்லை என காரணம் கூறுகின்றனர்.அப்போது, அவருக்கு ஆதரவாக நிறைய விவசாயிகள் குரல் எழுப்பி, இதேநிலை மாவட்டம் முழுதும் நிலவுகிறது என கவலை தெரிவித் தனர்.நாகராஜ்: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறந்து, 19 நாளாகிறது. அதற்கு, 2 மாதங்களுக்கு முன்பே, பசுந்தாள் உயிர் உரத்துக்கு விதைகள் கேட்டும் வேளாண் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால் அதன் உற்பத்தி கேள்விக்குறியாகிவிட்டது.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை