உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

கெங்கவல்லி, கெங்கவல்லி வழியே செல்லும் சுவேத நதியில் இருந்து, இலுப்பை தோப்பு வழியே, 4 கி.மீ.,ல் உள்ள நடுவலுார் ஏரிக்கு செல்லும்படி, ஓடை வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்கால் இருபுறமும், பொதுப்பணித்துறை சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து வந்தது. ஆனால், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆக்கிரமிப்பால், அப்பணி தடைபட்டு, ஏரி பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நேற்று, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், மக்கள், ஆத்துார் --- பெரம்பலுார் சாலையில், ஒதியத்துார் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற கோஷம் எழுப்பினர்.கெங்கவல்லி வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ