உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்காச்சோள பயிருக்கு பிரீமியம் விவசாயிகளிடம் இல்லை ஆர்வம்

மக்காச்சோள பயிருக்கு பிரீமியம் விவசாயிகளிடம் இல்லை ஆர்வம்

சேலம் சேலம் மாவட்டத்தில், 45,983 ெஹக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட, 5,000 ெஹக்டேர் அதிகம். குறிப்பாக அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பதாக, வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அதேநேரம் மக்காச்சோளத்துக்கு காப்பீடு செய்தால் மழை, வெள்ளம், புயல், வறட்சி ஆகிய இடர்பாடுகளால் மகசூல் பாதிப்புக்கு ஏற்ப, கணக்கீடு செய்யப்பட்டு, உரிய நஷ்டஈடு பெறலாம். அதற்கு ஏக்கருக்கு, 482 ரூபாய் பிரீமியம் செலுத்தி காப்பீடு பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அக்., 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், 45,983 ெஹக்டேரில், 5,653 ெஹக்டேருக்கு மட்டும் காப்பீடு பெறப்பட்டுள்ளது. இது, 12.3 சதவீதம். இது, விவசாயிகளின் ஆர்வமின்மையை வெளிப்படுத்தி உள்ளது. அதனால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, காப்பீடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !