உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆனைமடுவு அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

ஆனைமடுவு அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

வாழப்பாடிவாழப்பாடி அடுத்த ஆனைமடுவு அணையில் இருந்து, தண்ணீர் திறக்க புதிய பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின், தண்ணீர் திறக்கப்பட்டது.சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க, நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, பழைய பாசன பகுதிகளுக்கு நேற்று காலை, 8:00 மணிக்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, அங்கு கூடியிருந்த புதிய பாசன விவசாயிகள், தங்களுக்கும் போதிய தண்ணீர் திறக்க கோரி முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தேன்மொழி, உதவி பொறியாளர்கள் சுகந்தன், சண்முகம், வாழப்பாடி போலீசார் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 4 மணி நேரத்துக்கு பின், நேற்று மதியம், 12:00 மணிக்கு பழைய பாசன பகுதிக்கு தலைமை மதகு வழியாக வினாடிக்கு, நாளொன்றுக்கு, 10.63 மில்லியன் கனஅடி வீதம், 12 நாட்களுக்கு 127.39 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதுகுறித்து, புதிய பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவராமன் கூறியதாவது: புதிய பாசன பகுதியில், ஏழு ஊராட்சிகளில், 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. பழைய பாசன பகுதியில், 512 ஏக்கர் அளவில் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. புதிய பாசன பகுதிகளுக்கு, அரசு ஆணையை காரணம் காட்டி போதிய தண்ணீர் விடுவதில்லை. தற்போது, பழைய பாசன பகுதிகளுக்கு, 60 சதவீத தண்ணீரும், புதிய பாசன பகுதிகளுக்கு, 40 சதவீத தண்ணீரும் வழங்கப்படுகிறது. 1992ல் அணை கட்டப்பட்டது முதல், 33 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடுவதில், பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு, முறையான வரை விதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. புதிய பாசன பகுதிகளுக்கு, விவசாயிகளின் நலன் கருதி போதிய தண்ணீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு கூறினார்.இது குறித்து, நீர்வளத்துறை உதவி பொறியாளர் சுகந்தன் கூறுகையில்,'' அரசு ஆணைப்படி, நீர் இருப்பு பொருத்து தேவைக்கு ஏற்ப, தண்ணீர் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி