உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சந்தியூரில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

சந்தியூரில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

பனமரத்துப்பட்டி, சேலம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பாரத பிரதமர் விவசாயிகளுக்கு கவுரவ நிதி விடுவித்த நிகழ்ச்சி கடந்த, 2ல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஆடி பட்டத்திற்கு உகந்த சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, விவசாயிகள்-வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் பதில் அளித்தனர். இதில், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், வீரபாண்டி வட்டார வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !