மேலும் செய்திகள்
குழந்தை பிறந்து 5 நாளில் இறந்த சோகம்
07-Aug-2025
ஆத்துார், பெண் குழந்தை பிறந்ததால், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே வளையமாதேவி, திருமால் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி பிரபு, 25; இவரது மனைவி பிருந்தா, 22; கடந்த, 16ல் பிருந்தாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் பிரபு வருத்தமடைந்துள்ளார். மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டுக்கும் செல்லாமல் இருந்தார். இதனால் மொபைல்போனில் பிருந்தா தொடர்பு கொண்டார்.அப்போதும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் 'குழந்தையையும், என்னையும் பார்க்க வர வேண்டாம்' என பிருந்தா கூறியுள்ளார். இந்நிலையில் மஞ்சினி மணிகண்டபுரம் பஸ் ஸ்டாப்பில், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து நேற்று முன்தினம் பிரபு மயங்கி கிடந்தார். தகவலறிந்து சென்ற உறவினர்கள் மீட்டு, ஆத்துார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Aug-2025