உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை தந்தை, 2 புரோக்கர்களுக்கு காப்பு

ரூ.1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை தந்தை, 2 புரோக்கர்களுக்கு காப்பு

இடைப்பாடி:சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சித்துார், தும்பொதியான்வளவைச் சேர்ந்தவர் சேட்டு, 25, கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி குண்டுமல்லி, 24. இவர்களுக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், ஐந்து குழந்தைகள் பிறந்தன. தற்போது, ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து, 18 நாட்களே ஆன அந்த குழந்தையை, புரோக்கர்கள் வாயிலாக 1 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றனர்.அந்த குழந்தையை, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த தேவேந்திரன், சட்டரீதியாக தத்தெடுக்க விரும்பினார். இதனால் அவர், நேற்று முன்தினம் சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சென்று விபரம் கேட்டார். அப்போது, சேட்டுவின் குழந்தை குறித்து கூறினார். அதிர்ச்சியடைந்த அலுவலர்கள், சேட்டுவிடம் பேசி, குழந்தையை எடுத்துக் கொண்டு சேலம் வர அறிவுறுத்தினர். இதையடுத்து, குழந்தையுடன் சேலம் வந்த தம்பதியை, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஸ்ரீமுரளி விசாரித்தார்.அதில், அவர்களுக்கு பிறந்த ஆண் மற்றும் இரு பெண் குழந்தைகளை, புரோக்கர்கள் மூலம் ஏற்கனவே தலா, 1 லட்சம் ரூபாய்க்கு விற்றதும், ஆறாவதாக பிறந்த குழந்தையை தற்போது விற்க முயன்றதும் தெரிந்தது. இதனால், குழந்தையுடன் குண்டுமல்லி, அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.குழந்தையின் தந்தை சேட்டு, புரோக்கர்களான இடைப்பாடி முனுசாமி, 46, கவுண்டம்பட்டி செந்தில்முருகன், 46, ஆகியோரை பூலாம்பட்டி போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை