உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கனமழைக்கு அடித்துச்சென்ற குட்டை சீரமைக்க 11 ஆண்டுக்கு பின் கள ஆய்வு

கனமழைக்கு அடித்துச்சென்ற குட்டை சீரமைக்க 11 ஆண்டுக்கு பின் கள ஆய்வு

கெங்கவல்லி, டிச. 21-கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி, வேப்படியில், 2013ல் பெய்த கன மழையின்போது, ஒரு ெஹக்டேரில் வனத்துறை மூலம் கட்டப்பட்டிருந்த கசிவுநீர் குட்டை அடித்துச்சென்றது. இதனால் மழை காலங்களில் தண்ணீரை தேக்க முடியாமல், ஓடைகளில் இருந்து பெரம்பலுார் மாவட்டம் பூலாம்பாடிக்கு செல்கிறது. இதனால் கசிவுநீர் குட்டையை மீண்டும் அமைக்க, அப்பகுதி மக்கள், தன்னார்வ அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் நேற்று, கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர், ஓசூர் தன்னார்வ அமைப்பினர், மலைவாழ் மக்களுடன் சென்று, சேதமடைந்த குட்டை பகுதியை கள ஆய்வு செய்தனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'குட்டையை மீண்டும் அமைப்பது தொடர்பாக, கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை, ஆத்துார் கோட்ட வன அலுவலர் மூலம் அரசுக்கு அனுப்பப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ