உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சவுக்கு தோப்பில் தீ விபத்து

சவுக்கு தோப்பில் தீ விபத்து

ஆத்துார், ஆத்துார் அருகே, சவுக்கு தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது.ஆத்துார், புதிய கல்லாநத்தம் சாலையை சேர்ந்தவர் செந்தில், 50. இவரது இரண்டு ஏக்கர் பரப்பளவில் சவுக்கு தோப்பு உள்ளது. நேற்று மாலை, 4:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதில், 20 சென்ட் பரப்பளவில் சவுக்கு தோப்பில் உள்ள புற்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை