உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டு பூச்சி வளர்ப்பு பண்ணையில் தீ ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

பட்டு பூச்சி வளர்ப்பு பண்ணையில் தீ ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிரா-மத்தை சேர்ந்தவர் விவசாயி வில்வநாதன், 39, இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணை வைத்-துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென பட்டு பூச்சி வளர்ப்பு பண்ணையில் தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அப்பகுதியினர், சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், தீ பற்றி எரிந்து கொண்டிருந்த நிலத்தின் அருகே தீயணைப்பு வாகனம் செல்வ-தற்கு போதிய வழி இல்லாததால், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்காமல் திரும்பி சென்றனர். சோளிங்கர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்-கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்-டது தெரியவந்தது. விபத்தில், 3லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை