மின்மாற்றியில் இருந்து தீ வைக்கோல் கட்டு நாசம்
ஆத்துார், ஆத்துார், புது கொத்தாம்பாடியை சேர்ந்தவர் சிவக்குமார், 50. இவரது விவசாய தோட்டம் அருகே மின்மாற்றி உள்ளது. அதில் இருந்து நேற்று மதியம், 1:10 மணிக்கு தீப்பொறி ஏற்பட்டு, தோட்டத்தில் வைத்திருந்த வைக்கோல் கட்டு மீது விழுந்தது. இதுகுறித்து கிடைத்த தகவல்படி, 20 நிமிடத்தில் அங்கு சென்ற ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் சில வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமாகின.