உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதையில் ஓட்டிய வீரரால் தீயணைப்பு வாகனம் விபத்து

போதையில் ஓட்டிய வீரரால் தீயணைப்பு வாகனம் விபத்து

கெங்கவல்லி:மது போதையில் தீயணைப்பு வீரர் வாகனம் ஒட்டியதால், டிராக்டர் மீது மோதி அதன் டிரைவர், சில வீரர்கள் காயமடைந்தனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, உடையார்பாளையம் குடியிருப்பில் மலை பாம்பு இருப்பதாக நேற்று மதியம் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு வாகனம் புறப்பட்டது. நாவலுாரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், 35, ஓட்டினார். கூடமலை ஊராட்சி, கவுண்டம்பாளையத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்புறம் ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது, அதிவேகமாக வந்த தீயணைப்பு வாகனம் மோதி, டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. தீயணைப்பு வாகனம், விவசாய தோட்டத்தில் புகுந்து வாகன முன் பகுதி சேதமடைந்தது. வாகனத்தில் சென்ற வீரர் பாலகிருஷ்ணனுக்கு, இடது காலில் முறிவு ஏற்பட்டது. மற்ற வீரர்கள் காயமடைந்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'சுபாஷ் சந்திரபோஸ் மது போதையில் தீயணைப்பு வாகனத்தை ஓட்டியது தெரிந்தது. தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி