உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் தொட்டி குளோரின் அறையில் காஸ் கசிவு துரிதமாக செயல்பட்டு தடுத்த தீயணைப்பு வீரர்கள்

குடிநீர் தொட்டி குளோரின் அறையில் காஸ் கசிவு துரிதமாக செயல்பட்டு தடுத்த தீயணைப்பு வீரர்கள்

ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. அங்கு தண்ணீரை சுத்தப்படுத்த, 28 லட்சம் ரூபாயில், வாயு குளோரினேற்றும் நிலையம் உள்ளது. அங்கு நேற்று மாலை, 6:00 மணிக்கு, காஸ் கசிவு ஏற்பட்டது.தொட்டி பணியாளர்கள் தகவல்படி, மாலை, 6:10 மணிக்கு, அங்கு சென்ற ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், காஸ் கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காஸ் வெளியேறும் வால்வை மூட முயன்றபோது, வீரர்கள் மூச்சுத்திணறலில் சிக்கிக்கொண்டனர். பின் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திக்கொண்ட வீரர்கள், உயிரை பணயம் வைத்து, ஒரு மணி நேரம் போராடி காஸ் கசிவு வால்வை சரிசெய்து தடுத்தனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு காஸ் வெளியேற்றத்தை தடுத்தனர். இப்பணியின்போது குடியிருப்புவாசிகள், வீடுகளுக்குள்ளேயே இருந்தனர். காஸ் கசிவு குறித்து, நரசிங்கபுரம் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ