மேலும் செய்திகள்
மாநில நெடுஞ்சாலைகளை அரசே ஏற்க வலியுறுத்தல்
13-Dec-2025
ஓமலுார்: ஓமலுார் உட்கோட்ட போலீஸ் துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. ஓமலுார் பஸ் ஸ்டாண்டில், 5 கி.மீ., போட்டியை, ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதில், 200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், இலக்கை நோக்கி ஓடினர். தாலுகா அலுவலகம் சாலை, கடைவீதி, ஆர்.சி.செட்டிப்பட்டி ரவுண்டானா வழியே சென்று, மீண்டும் பஸ் ஸ்டாண்டை அடைந்தனர். பெரிய சோரகையை சேர்ந்த தங்கதுரை, சேலம் ஆரோக்கியராஜ், வேலகவுண்டனுார் பிரவீன் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு, டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், பரிசு வழங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ஓமலுார் அங்கப்பன், மகளிர் ஸ்டேஷன் யுவராணி, ஜலகண்டாபுரம் சசிகலா, ஓமலுார் போக்குவரத்து ராமச்சந்திரன் பங்கேற்றனர்.அதேபோல் மேட்டூர் உட்கோட்டம் சார்பில், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியை, டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் தொடங்கிவைத்தார். அதில், 5 முதல், 60 வயது வரை உள்ள வீரர், -வீராங்கனைகள் என, 700 பேர் பங்கேற்றனர். முடிவில், நவீன் பிரகாஷ், திரிலோகேஷ், சூர்யா ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், பரிசு வழங்கினார். ஆத்துாரில் நடந்த மாரத்தானை, டி.எஸ்.பி., சத்யராஜ் தொடங்கிவைத்தார். 500க்கும் மேற்பட்டோர் ஓடினர். ஆண்கள் பிரிவில் சீனிவாசன், ராதாகிருஷ்ணன், கேசவராஜ் ஆகியோரும், பெண்கள் பிரிவில், திவ்யா, காவ்யாஸ்ரீ, பிரகதீஷா ஆகியோரும் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு, பரிசு, சான்றிதழ்களை, ஆர்.டி.ஓ., தமிழ்மணி வழங்கினார்.
13-Dec-2025