நாட்டு துப்பாக்கிகள் ஒப்படைக்க அக்.,30 வரை வனத்துறை கெடு
மேட்டூர், மேட்டூர் வனச்சரகர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கை:மேட்டூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட, வனப்பகுதி அருகேயுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்தால், தாமாக முன்வந்து வனத்துறை அலுவலர்களிடமோ அல்லது ஊர் முக்கிய பிரமுகர் மூலமாகவோ வரும், 30க்குள் ஒப்படைக்க வேண்டும்.அவ்வாறு தானாக முன்வந்து ஒப்படைப்பவர்கள் மீது, வனத்துறை மூலம் எந்தவித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது. ஒப்படைப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும். அதன் பின்பு வனத்துறை மற்றும் காவல்துறையின் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்படும். அப்போது நாட்டு துப்பாக்கி ஒப்படைக்காமல் வைத்திருக்கும் நபர்கள், அதன் மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம், 1882, வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972, இந்திய படைகல சட்டம், 1959 ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிந்து கடும் தண்டனை விதிக்கப்படும். சந்தேகங்களுக்கு மேட்டூர் சரக வனத்துறை அலுவலர்களின், 94425 27150, 73393 30439, 63832 57956, 86675 69955, 99420 13433 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.